T20 உலகக் கோப்பை ; பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம் விதித்த கிரிக்கெட் வாரியம்

T20 உலகக் கோப்பை ; பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம் விதித்த கிரிக்கெட் வாரியம்

இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ICC ஆண்கள் T20 உலகக் கோப்பை 2026 தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

எனினும், நடப்பு தொடரில் மோசமான ஆட்டத்தைக் காட்டிய பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறியது.

அரையிறுதி சுற்றுக்கு முன்னேறாதது பாகிஸ்தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் வீரர்கள் மீது கடும் விமர்சனங்களும் எழுந்தன.

இந்நிலையில், பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அபராதம் விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மோசமான ஆட்டத்திற்காக இந்திய மதிப்பில் 16 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், குரூப் சுற்றில் இந்திய தேசிய கிரிக்கெட் அணியை சந்தித்த தோல்வி இந்த நடவடிக்கைக்கான முக்கிய காரணமாக அமைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )