அயதுல்லா அலி காமெனி மறைவு ; சம்மாந்துறையில் துக்கக் கொடியேற்றம்

அயதுல்லா அலி காமெனி மறைவு ; சம்மாந்துறையில் துக்கக் கொடியேற்றம்

அயதுல்லா அலி காமெனிஅவர்களின் மறைவையொட்டி சம்மாந்துறையில் நேற்று முன்தினம்(02) துக்கக் கொடிகள் ஏற்றப்பட்டன.

உலக இஸ்லாமிய தலைவர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவராகக் கருதப்பட்ட அவர்களின் இழப்பை நினைவுகூரும் வகையில், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அ.அப்னான் தலைமையில் இளைஞர்கள் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்வில் பல இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். மறைந்த தலைவரின் சேவைகளையும் அவரின் பங்களிப்புகளையும் நினைவுகூர்ந்து துக்கம் அனுசரிக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

அமைதியான முறையில் நடைபெற்ற இந்நிகழ்வு பிரதேச மக்களின் கவனத்தை ஈர்த்தது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )