வாட்ஸ் அப்பில் வரும் புதிய அப்டேட்

வாட்ஸ் அப்பில் வரும் புதிய அப்டேட்

பிரபல சமூக வலைத்தள செயலியான வாட்ஸ் அப் அவ்வப்போது புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. சந்தையில் தனக்கு உள்ள போட்டியை சமாளிக்கவும், பயனர்களை கவரவும் இந்த புதிய அப்டேட்கள் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் வாட்ஸ் அப்பில் விரைவில் “ஸ்பாய்லர்” என்ற ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ் அப் பற்றிய அப்டேட்களை வெளியிடும் வாபீட்டா இன்போ இந்த தகவலை தெரிவித்துள்ளது.

ஸ்பாய்லர் வசதி எப்படி செயல்படும் என்றால், வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் மெசேஜை ஸ்பாய்லர் ஆப்ஷனில் தேர்வு செய்து அனுப்பினால், அதை பெறுபவர்களுக்கு மெசேஜ் நேரடியாக தெரியாது. அந்த மெசேஜில் ஒரு முறை டேப் செய்தால் மட்டுமே அதில் உள்ள விவரங்கள் தெரியும்.

குரூப்களிலும் இதேபோன்று மெசேஜ் அனுப்பும் வசதி கொண்டு வரப்பட இருக்கிறதாம். தற்போதைக்கு டெக்ஸ்ட் மெசேஜுக்கு மட்டும் இந்த ஆப்ஷன் கொண்டு வரப்படும் எனவும், விரைவில் இமேஜ், பிடிஎப் போன்றவற்றையும் இப்படி அனுப்பும் வகையில் விரிவுபடுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி ஐஒஎஸ் வெர்ஷன் 26.6.10.71-ல் இந்த அப்டேட்டை காண முடிகிறது. ஆப்பிள் ஐமெசேஜ் சேவையில் இதேபோன்ற வசதி ஏற்கனவே உள்ளது. இதை பயன்படுத்தி, பயனர்கள் தங்கள் டெக்ஸ்ட் மெசேஜை மறைக்க முடியும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )