
16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகத் தடை ; கர்நாடக அரசு அறிவிப்பு
இந்தியாவின் தொழில்நுட்ப மையமாகக் கருதப்படும் பெங்களூரு அமைந்துள்ள கர்நாடகா மாநில அரசு, 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த அறிவிப்பை மாநில முதல்வர் சித்தராமையா இன்று (06) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
அதன்படி, தென்னிந்தியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்த முதல் மாநிலமாக கர்நாடகா மாறியுள்ளது.
முதல்வர் சித்தராமையா தனது பட்ஜெட் உரையில் கருத்து தெரிவிக்கையில், “குழந்தைகள் மத்தியில் அதிகரித்து வரும் மொபைல் போன் பயன்பாட்டின் எதிர்மறை விளைவுகளைத் தடுக்கும் நோக்கில், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
CATEGORIES India

