
முதியோர் இல்லமாக செயற்படும்பட்டுவத்தே சாமரவின் மனைவியின் வீட்டில் துப்பாக்கிச் சூடு
பட்டுவத்தே சாமர’ என்று அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் மனைவியின் வீட்டில் இன்று காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்றுஇடம்பெற்றுளளது,
இன்று அதிகாலை 1:25 அளவில் ஜா-எல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிகம்பிட்டிய, புனித அனா வீதி, இலக்கம் 05 இல் அமைந்துள்ள வீட்டை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மனோஜ் சுரங்க லியனகே எனப்படும் ‘பட்டுவத்தே சாமர’ என்பவரின் மனைவியான சதுரிக்கா வீரசூரிய வசித்து வந்த வீடே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T56 ரக துப்பாக்கியால் சுமார் 23 தடவைகள் வேட்டுக்களை தீர்த்துள்ளனர்.
இதன்போது அருகில் இருந்த மேலும் இரண்டு வீடுகளும் சேதமடைந்துள்ளன.
படுவத்தே சாமரவின் மனைவி தற்போது துபாயில் வசித்து வருவதுடன், இந்த வீடு கடந்த இரண்டு மாதங்களாக மாதம் 125,000 ரூபா வாடகைக்கு முதியோர் இல்லம் நடத்துவதற்காக வழங்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் இந்த வீட்டில் 9 முதியவர்களும், 4 தாதியர்களும் இருந்துள்ளனர்.
குறித்த வீட்டின் மீது ஏற்கனவே 2025.12.15 மற்றும் 2025.12.24 ஆகிய திகதிகளிலும் இதேபோன்று துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

