
T20 உலகக் கோப்பை கிரிக்கெட் ; 3வது முறையாக உலகக் கோப்பையை வென்ற இந்தியா
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 255 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணியின் சார்பில் ஜேம்ஸ் நீஷம் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 256 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் கட்டுப்படுத்தப்பட்ட பந்துவீச்சால் தடுமாறியது. 19 ஓவர்களில் 159 ரன்களுக்கு அந்த அணி ஆல் அவுட்டானது.
இதனால் இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது.
மேலும், போட்டியை நடத்திய நாடு என்ற முறையில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற அணியாக இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளது.
அதேபோல், மூன்று முறை டி20 உலகக் கோப்பையை வென்ற ஒரே அணியாகவும் இந்தியா சாதனை படைத்துள்ளது.

