
ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக இரண்டு பிரம்மாண்ட அமெரிக்க விமானங்கள் பிரித்தானியா வருகை
ஈரானுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கைகளுக்காக ,
தனது இராணுவ தளங்களைப் பயன்படுத்த பிரித்தானியா ,அமெரிக்காவிற்கு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை, மேலும் இரண்டு அமெரிக்க விமானப்படை விமானங்கள் பிரித்தானியாவின் RAF Fairford தளத்தில் தரையிறங்கியுள்ளன.
நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்பட்ட வீடியோக்களில் , இரண்டு Boeing C-17 Globemaster போக்குவரத்து விமானங்கள் இந்த தளத்திற்கு வந்துள்ளன. சில நாட்களுக்கு முன்னர்தான் B-1 Lancer ரக குண்டுவீச்சு விமானங்கள் இங்கு வந்தடைந்தன எனவும் தெரிவிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் இரவு ஈரானிலிருந்து ஈராக் நோக்கி ஏவப்பட்ட ட்ரோன் ஒன்றை பிரித்தானியா சுட்டு வீழ்த்தியது. இந்தப் பிராந்தியத்தில் பிரித்தானியாவின் Typhoon மற்றும் F-35 ரக போர் விமானங்கள் தற்காப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
வான்வழி கண்காணிப்புப் பணிகளுக்காக Merlin ரக ஹெலிகாப்டர் விரைவில் வரவுள்ளது. இது ஒரு மைல் உயரத்தில் பறந்து, ட்ரோன் அல்லது ஏவுகணைத் தாக்குதல்களை முன்கூட்டியே எச்சரிக்கும் திறன் கொண்டது.
இந்த விமானங்களின் வருகையைத் தொடர்ந்து, பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டார்மர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கிடையில் தொலைபேசி உரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

