
கோடாவுடன் ஒருவர் கைது
மொரகஹஹேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிடவில பகுதியில் சட்டவிரோத மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்படும் கோடாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (08) மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த கைது இடம்பெற்றதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.
சோதனையின் போது சந்தேகநபரிடமிருந்து 1278 லீற்றர் அளவிலான சட்டவிரோத மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்படும் கோடா கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் 49 வயதுடையவர் என்றும், கோனபொல பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரகஹஹேன பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

