“போரின் முடிவை தீர்மானிப்பது நாங்கள் தான்”

“போரின் முடிவை தீர்மானிப்பது நாங்கள் தான்”

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை குறிவைத்து ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் கடுமையான தாக்குதல்களின் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்ற நிலை அதிகரித்துள்ளதுடன், உலகளாவிய அளவிலும் அதன் தாக்கம் உணரப்படுகிறது.

குறிப்பாக கச்சா எண்ணெய் விலை உலக சந்தையில் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அண்மையில் தெரிவித்திருந்தார்.

ஆனால், அதற்கு ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை கடுமையான பதிலளித்துள்ளது.

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “போரின் முடிவை தீர்மானிப்பது நாங்கள்தான்.

இந்த பிராந்தியத்தின் சமநிலையும் எதிர்கால நிலையும் தற்போது எங்கள் ஆயுதப்படைகளின் கைகளில் உள்ளது.

அமெரிக்கப் படைகள் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், டோரல் நேஷனல் கோல்ஃப் கிளப்பில் செய்தியாளர்களிடம் பேசிய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், “இந்தப் போர் மிக விரைவில் முடிவுக்கு வரும் என்று நான் நினைக்கிறேன். அவர்களின் தலைமை உட்பட அவர்களிடம் இருந்த பல முக்கிய அம்சங்கள் இப்போது இல்லாமல் போய்விட்டன.

ஹார்முஸ் ஜலசந்தியை மூட முயன்றால் தாக்குதல் மேலும் தீவிரமாகும். அவர்கள் ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், உலகின் அந்தப் பகுதியில் மீண்டும் நிலைநிறுத்த முடியாத அளவுக்கு கடுமையான தாக்குதலை நாம் மேற்கொள்வோம்” என்று எச்சரித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )