
லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் 300 ரூயாபாயால் அதிகரிப்பு
லிட்ரோ எரிவாயுவின் விலையை இன்று (10) நள்ளிரவு முதல் அதிகரிப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோகிராம் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.300 ஆல் அதிகரிக்கப்பட்டு , அதன் புதிய விலை 3990 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது..
5 கிலோகிராம் கேஸ் சிலிண்டரின் விலை, 120 ரூபாயால் அதிகரித்து அதன் புதிய விலை 1602 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 2.3 கிலோகிராம் கேஸ் சிலிண்டரின் விலை 56 ரூபாயால் அதிகரித்து அதன் புதிய விலை 750 ரூபாயாக நிரணையிட்டப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka

