
இந்திய மீனவர்கள் 5 பேர் கைது
தமிழ்நாடு மாநிலத்தின் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் இலங்கை கடற்படை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இலங்கைக்குச் சொந்தமான கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்களுடன், அவர்கள் பயன்படுத்திய மீன்பிடி படகையும் கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
மேலும் விசாரணைக்காக, கைது செய்யப்பட்ட ஐந்து மீனவர்களும் மன்னாரில் உள்ள கடற்படை தளத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
CATEGORIES Sri Lanka

