
தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறிய இஷன் கிஷன்
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு இந்தியாவின் இஷன் கிஷன் முன்னேறியுள்ளார்.
உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதியில் 39, இறுதியில் 54 ஓட்டங்களைப் பெற்றமையைத் தொடர்ந்தே நான்காமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தையடைந்துள்ளார்.
இதேவேளை அரையிறுதிப் போட்டியில் 58, இறுதிப் போட்டியில் 52 ஓட்டங்களைப் பெற்ற நியூசிலாந்தின் டிம் செய்ஃபேர்ட், 10ஆம் இடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி ஆறாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
- அபிஷேக் ஷர்மா, 2. இஷன் கிஷன், 3. சஹிப்ஸடா பர்ஹான், 4. பில் ஸோல்ட், 5. பதும் நிஸங்க, 6. டிம் செய்ஃபேர்ட், 7. திலக் வர்மா, 8. டெவால்ட் பிறெவிஸ், 9. சூரியகுமார் யாதவ், 10. ஜொஸ் பட்லர்.
CATEGORIES Sports News

