
தெற்கு லெபனானின் உள்ள ஸ்ராரியே பாலம் மீது தாக்குதல்
லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள லிதானி (Litani) ஆற்றைக் கடக்கும் ஸ்ராரியே (Zrariyeh) பாலத்தை இலக்காகக் கொண்டு தாக்குதல் மேற்கொண்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்கள் இந்தப் பாலத்தை முக்கிய பாதையாக பயன்படுத்தியதாகவும், சமீபத்தில் அந்தப் பகுதியில் ஏவுகணை ஏவுதளங்கள் அமைக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும், ஈரானின் ஆதரவுடன் நடைபெறும் நடவடிக்கைகளில் ஹிஸ்புல்லா இணைந்து செயல்பட முயற்சிப்பதை எதிர்த்து தாங்கள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

