தித்வா சூறாவளி நிவாரணப் பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 பெண் அபிவிருத்தி அதிகாரிகள் கைது

தித்வா சூறாவளி நிவாரணப் பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 பெண் அபிவிருத்தி அதிகாரிகள் கைது

‘தித்வா’ (Ditwa) சூறாவளியினால் பாதிக்கப்பட்ட அரணாயக்க பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் மற்றும் ஏனைய நிறுவனங்களால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களைத் தமது வீடுகளில் பதுக்கி வைத்திருந்த இரண்டு பெண் அபிவிருத்தி அதிகாரிகள் அரணாயக்க போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒரு அதிகாரி, அரணாயக்க பிரதேச செயலகத்தின் களஞ்சியப் பொறுப்பாளராகவும் கடமையாற்றியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளது.

கேகாலை மேலதிக மாவட்ட செயலாளர் திலித் நிஷாந்தவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கேகாலை மாவட்ட செயலாளர் ஜகத் எம். ஹேரத்தின் மேற்பார்வையில் மாவட்ட செயலக விசாரணை அதிகாரிகளும் அரணாயக்க பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சோதனையின் போது இந்த நிவாரணப் பொருட்கள் அதிகாரிகளின் வீடுகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

சம்பவம் குறித்து கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்கவின் நேரடி மேற்பார்வையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், கைப்பற்றப்பட்ட நிவாரணப் பொருட்களின் பெறுமதியை மதிப்பிடும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )