
சுவிட்சர்லாந்து வான்பரப்பில் போர் விமானம் பறக்க அமெரிக்க ராணுவம் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு
அமெரிக்க ராணுவத்தின் இரண்டு போர் விமானங்கள் சுவிட்சர்லாந்து வான்பரப்பிற்கு மேலாகப் பறப்பதற்கு விடுத்த கோரிக்கையை அந்த நாடு நிராகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுவிட்சர்லாந்தின் ‘நடுநிலைமை’ தொடர்பான சட்டங்களை மேற்கோள் காட்டி இந்த நிராகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், இரண்டு விமானங்களுக்கு வான்பரப்பைத் திறக்க மறுத்த சுவிட்சர்லாந்து அரசு, மேலும் மூன்று ஏனைய வகையான விமானங்களுக்குத் தனது வான் எல்லையைப் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.
இது குறித்து சுவிட்சர்லாந்து அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பராமரிப்பு விமானங்கள் மற்றும் போக்குவரத்து விமானங்களுக்கு மட்டுமே தமது வான்பரப்பில் பறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், சுவிட்சர்லாந்து போன்ற நடுநிலை நாடுகள் தமது வான்பரப்பை ராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த அனுமதிப்பதில் மிகவும் அவதானமாகச் செயல்படுகின்றன.
போர் விமானங்கள் தமது வான்பரப்பைக் கடந்து செல்வது தமது நாட்டின் நடுநிலைமைக் கொள்கையை பாதிக்கும் என சுவிட்சர்லாந்து கருதுகிறது.

