உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் (A/L) பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

அதன்படி, உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், மாணவர்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்பே தங்களது பெறுபேறுகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

இதேவேளை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து, செய்முறைப் பரீட்சைகள் ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

செய்முறைப் பரீட்சைகள் நிறைவடைந்தவுடன், சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளையும் விரைவாக வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )