
அமெரிக்க விசேட பிரதிநிதி செர்ஜியோ கோர் இலங்கை விஜயம்
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க விசேட பிரதிநிதி செர்ஜியோ கோர் இன்று (19) உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்தடைந்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
இன்று முதல் மார்ச் 24 ஆம் திகதி வரை அவர் இலங்கை மற்றும் மாலைதீவுகள் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, இந்தியப் பெருங்கடல் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் பல உயர்மட்ட கலந்துரையாடல்களில் அவர் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் நாட்டின் சிரேஷ்ட தலைவர்களைச் சந்தித்து அமெரிக்கா–இலங்கை உறவின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதோடு, பல துறைகளில் இருநாட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

