எரிபொருள் விலை உயர்வு ; முச்சக்கர வண்டிக் கட்டணத்தை உயர்த்த கோரிக்கை

எரிபொருள் விலை உயர்வு ; முச்சக்கர வண்டிக் கட்டணத்தை உயர்த்த கோரிக்கை

அரசாங்கம் அண்மையில் பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளதைத் தொடர்ந்து, முச்சக்கர வண்டிகளின் ஆரம்ப கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என வண்டிச் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இன்று (22) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தேசிய முச்சக்கர வண்டிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரோஹன பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “எரிபொருள் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு எங்கள் சேவைக்கு பெரிய சவாலாக உள்ளது.

எரிபொருள் கிடைப்பதில் சிக்கல் இருக்கும் நிலையில், விலையேற்றம் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மரத்திலிருந்து விழுந்த மனிதனை காளை இழுப்பது போன்ற நிலை,” என்றார்.

முதல் கிலோமீட்டருக்கான முச்சக்கர வண்டிக் கட்டணத்தை ரூ.20 உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளதாகவும், மீட்டர் பயன்படுத்தும் ஓட்டுநர்களால் மட்டுமே இந்த நிலையை சமாளிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய நிலை குறித்து விரைவில் ஜனாதிபதி செயலகத்துடன் கலந்துரையாட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )