அனுமதியின்றி டீசல் விற்பனை ; ஒருவர் கைது

அனுமதியின்றி டீசல் விற்பனை ; ஒருவர் கைது

அனுமதிப்பத்திரமின்றி 1,820 லீற்றர் டீசலை வைத்திருந்ததும், அதனை விற்பனை செய்ததும் தொடர்பில் சேருனுவர பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் சேருனுவர பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கந்தளாய் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இந்தக் கைது இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருனுவர பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )