சீமெந்து விலை அதிகரிப்பு

சீமெந்து விலை அதிகரிப்பு

நெருக்கடியான பொருளாதார சூழ்நிலையின் பின்னணியில், ஒரு மூட்டை சிசீமெந்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்டுமானப் பொருள் விற்பனையாளர்கள் தெரிவித்ததன்படி, ஒரு மூட்டை சிமெந்தின் விலை சுமார் ரூபாய் 175 வரை உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக, தற்போதைய சந்தை விலை ஒரு மூட்டை சீமெந்து ரூபாய் 2,250 ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை, மணல் மற்றும் கல் உள்ளிட்ட பல கட்டுமானப் பொருட்களின் விலைகளும் ஏற்கனவே உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், கட்டுமானத் துறையில் செலவுகள் மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )