2026 உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் ஆரம்பம்

2026 உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் ஆரம்பம்

2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று (24) முதல் ஏப்ரல் 24ஆம் திகதி வரை இணையவழி மூலம் கோரப்படுகின்றன என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, விண்ணப்பதாரர்கள் www.doenets.lk மற்றும் www.onlineexams.gov.lk/eic ஆகிய உத்தியோகபூர்வ இணையதளங்களுக்குச் சென்று, வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி சரியான முறையில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலை மாணவர்கள் தமது பாடசாலை அதிபர் ஊடாக விண்ணப்பிக்க வேண்டும். தனியார் விண்ணப்பதாரர்கள் தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தி தனிப்பட்ட முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பாடசாலை அதிபர்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் மற்றும் கடவுச்சொற்களை பயன்படுத்தி விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு அதன் அச்சு பிரதியை பாதுகாப்பாக வைத்திருப்பதும் கட்டாயமாகும்.

விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதி நீடிக்கப்பட மாட்டாது என்பதால், குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களுக்கு 1911 அல்லது 0112785922, 0112784537, 0112786616, 0112784208 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அல்லது gcealexam@gmail.com மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளலாம்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )