
பம்பரகஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் தியானத்தில் ஈடுபட்டிருந்த போது சிறுத்தை தாக்கி உயிரிழந்த வெளிநாட்டு தேரர் குறித்த மேலதிக விபரங்கள்
அம்பாறை, பானம பகுதியில் உள்ள பம்பரகஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் தியானத்தில் ஈடுபட்டிருந்த போது, சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்த தேரர் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிரிழந்தவர் செக் குடியரசை (Czech Republic) சேர்ந்த 43 வயதுடைய தேரர் ஆவார். இவர் ‘நந்த’ (Nanda) தேரர் என அழைக்கப்பட்டுள்ளார்.
: இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது.
இவர் முதன்முதலில் 2021-ம் ஆண்டு குடும்பிகல ஆரண்ய சேனாசனத்திற்கு வருகை தந்து ஒரு மாதம் தங்கியிருந்து விட்டுத் தனது நாட்டுக்குத் திரும்பியுள்ளார்.
பின்னர் மீண்டும் 2025 ஜனவரி 20-ம்திகதி இலங்கை வந்து, கடந்த ஓராண்டு காலமாக குடும்பிகல மற்றும் பம்பரகஸ்தலாவ ஆகிய வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதிகளில் தியானத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
குடும்பிகல ஆரண்ய சேனாதிபதி பெல்வத்தே புத்தவங்ச தேரர் வழங்கிய தகவலின்படி, உயிரிழந்த தேரர் மேலும் இரு உள்ளூர் தேரர்களுடன் இணைந்து தியானத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
தற்போது பானம பொலிஸார் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மரண விசாரணைகளின் பின்னர், தேரரின் பூதவுடல் மேலதிக பிரேதப் பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
பானம பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

