
கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு 75 மில்லியன் ரூபாய் உட்பட3 அதிகாரிகளுக்கும் தலா 50 மில்லியன் ரூபாய் அபராதம்
கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு 75 மில்லியன் ரூபாய் உட்பட
3 அதிகாரிகளுக்கும் தலா 50 மில்லியன் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சுகாதாரத் துறையில் இடம்பெற்ற முறையற்ற கொள்முதல் செயல்முறை காரணமாக பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது..
இதன்படி, பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகள் தமது சொந்தப் பணத்திலிருந்து அரசுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
வழங்கப்பட்ட நஷ்டஈட்டு விபரங்கள்
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல-75 மில்லியன் ரூபாய்
முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர்ஜனக சந்திரகுப்த – 50மில்லியன் ரூபாய்
NMRA முன்னாள் தலைவர் பேராசிரியர் எஸ்.டி. ஜயரத்ன -50 மில்லியன் ரூபாய்
NMRA முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர – 50 மில்லியன் ரூபாய்
சுகாதார வழங்கல் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் துசித சுதர்சன- 50 மில்லியன் ரூபாய் தமது சொந்தப் பணத்திலிருந்து அரசுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

