
வரக்காபொலயில் 1,235 லீற்றர் டீசலுடன் சந்தேகநபர் ஒருவர் கைது
வரக்காபொல, மாஹேன பகுதியில் சட்டவிரோதமான முறையில் 1,235 லீற்றர் டீசலை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேகாலை பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
தோலங்கமுவ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வரக்காபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka
TAGS Sri lanka

