
டெல்லி – கொழும்பு இடையே நாளை முதல்புதிய நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் IndiGo நிறுவனம்
இந்தியாவின் முன்னனி விமான சேவை நிறுவனமான இந்திகோ (IndiGo), டெல்லி மற்றும் கொழும்புக்கு இடையில் புதிய நேரடி விமான சேவைகளை ஆரம்பிப்பதன் மூலம் இலங்கைக்கான தனது போக்குவரத்து வலையமைப்பை மேலும் பலப்படுத்துகிறது.
இந்தப் புதிய சேவை 2026 மார்ச் 29 முதல் நடைமுறைக்கு வரும்.
வாரத்திற்கு 6 நேரடி விமானங்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும். இதற்காக A320 ரக விமானங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளைப் பலப்படுத்துவதற்கும் இந்த சேவை முக்கியமானதாக அமையும் என கூறப்பட்டுள்ளது.
இந்தப் புதிய சேவையுடன் சேர்த்து, இந்தியாவின் 5 நகரங்களில் இருந்து (மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை மற்றும் டெல்லி) கொழும்புக்கு வாரத்திற்கு 55-க்கும் மேற்பட்ட விமானங்களையும் இந்திகோ இயக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, சென்னை மற்றும் திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வாரத்திற்கு 10 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
வாடிக்கையாளர்கள் இந்திகோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது செயலி மூலம் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம். அத்துடன் உணவுகள், பானங்கள் மற்றும் விருப்பமான இருக்கைகளை முன்கூட்டியே தெரிவு செய்யும் வசதிகளும் (UpFront மற்றும் Flexi) வழங்கப்பட்டுள்ளன.

