
எரிபொருள் வழங்கிய’இந்தியாவின் விரைவான ஆதரவுக்கு நன்றி-ஜனாதிபதி அனுர
38,000 மெட்ரிக் டன் எரிபொருளை வழங்குவதில் இந்தியா வழங்கிய விரைவான ஆதரவுக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நன்றி தெரிவித்தார்.
அவரின் X தள பதிவில்,
“மத்திய கிழக்கு மோதல் காரணமாக இலங்கை சந்தித்து வரும் எரிபொருள் விநியோகத் தடைகள் குறித்து சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினேன்.
இந்தியாவின் விரைவான ஆதரவுக்கு நன்றி. 38,000 மெட்ரிக் டன் எரிபொருள் நேற்று கொழும்புக்கு வந்து சேர்ந்தது. அத்துடன் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கும் எனது நன்றிகள்,” என்று ஜனாதிபதி பதிவிட்டுள்ளார் .
CATEGORIES Sri Lanka

