
ஈரானைத் தூரநோக்கற்ற முறையில் வழிநடத்திய பல இராணுவத் தலைவர்கள் கொல்லப்பட்டதாக டிரம்ப் அறிவிப்பு
தெஹ்ரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில், ஈரானைத் தூரநோக்கற்ற முறையில் வழிநடத்திய பல இராணுவத் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது சமூக ஊடகக் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். தெஹ்ரான் மீது நடத்தப்பட்ட கடும் தாக்குதல்களில் மேலும் பல இலக்குகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
உடன்படிக்கைகளுக்கு வருவதற்கு அல்லது ஹோர்முஸ் நீரிணையைத் திறந்துவிடுவதற்கு டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு வழங்கிய 48 மணிநேர அவகாசம் முடிவடைவதற்கு முன்னதாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
எவ்வாறாயினும், இந்தத் தாக்குதல் தொடர்பாக ஈரான் அரசாங்கம் இதுவரை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை.
இதேவேளை, குவைத் நாட்டில் உள்ள மின்சாரம் மற்றும் நீர் மின் உற்பத்தி நிலையங்களை இலக்கு வைத்து ஈரான் தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

