
அமெரிக்கா-ஈரான் போர்நிறுத்தத்தை வரவேற்கிறோம்ஆனால் அது லெபனானுக்குப் பொருந்தாது-நெதன்யாகு
ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்திவைக்கும் அமெரிக்காவின் முடிவை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வரவேற்றுள்ளது.
இருப்பினும், இந்த இரண்டு வார கால போர்நிறுத்தம் லெபனானுக்குப் பொருந்தாது என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீதான தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க எடுத்துள்ள முடிவை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தத் தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தம் ஈரானுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், லெபனானில் இஸ்ரேல் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இன்று X தளத்தில் அவர் வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்கா, இஸ்ரேல், ஈரானின் அண்டை நாடுகள் மற்றும் உலகிற்கு ஈரானால் அணுசக்தி, ஏவுகணை மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய அதிபர் ட்ரம்ப் எடுக்கும் முயற்சிகளை இஸ்ரேல் ஆதரிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல் போக்குகளுக்கு மத்தியில், அமெரிக்கா ஒரு தற்காலிகப் போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளது. ஆனால், ஹிஸ்புல்லா அமைப்பை இலக்கு வைத்து லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் எந்த மாற்றமும் இருக்காது என்பதை இந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது.

