கெசல்கமுவ ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கெசல்கமுவ ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கெசல்கமுவ ஆற்றில் அடையாளம் தெரியாத பெண்ணொருவரின் சடலம் மிதந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏந்திச் செல்லும் நோக்கில் பாயும் கெசல்கமுவ ஆறு பகுதியில், நோர்வூட் பகுதியில் இந்தச் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நோர்வூட் – பொககவந்தலாவ, மஸ்கெலியா பிரதான வீதியில் அமைந்துள்ள நோர்வூட் பாலத்தின் கீழ் ஆற்றில் சடலம் மிதப்பதாக பிரதேசவாசிகள் தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

இந்நிலையில், சடலத்தின் அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஹட்டன் பொலிஸ் பிரிவின் குற்றப்பிரிவு அதிகாரிகளின் உதவியுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என நோர்வூட் பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )