இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனானில் 254 பேர் உயிரிழப்பு- 1,165 பேர் காயம்

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனானில் 254 பேர் உயிரிழப்பு- 1,165 பேர் காயம்

லெபனான் முழுவதும் இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களில் 254 பேர் உயிரிழந்துள்ளதோடு, 1,165 பேர் காயமடைந்துள்ளதாக லெபனானின் சிவில் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

லெபனானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கிய பிறகு, இன்று இஸ்ரேல் நடத்திய மிகக் கடுமையான தாக்குதல் இதுவாகும்.

தரைவழித் தாக்குதல்கள் ஆரம்பித்த பின் லெபனான் எதிர்கொண்ட மிகப்பெரிய வான்வழித் தாக்குதல் இது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தலைநகர் பெய்ரூட் உட்பட லெபனானின் பல்வேறு பகுதிகளில் இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இத்தாக்குதலைத் தொடர்ந்து, பிராந்தியத்தில் எட்டப்பட்ட அமைதி ஒப்பந்தங்கள் மற்றும் போர்நிறுத்த முயற்சிகள் முறியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

லெபனான் மீதான இஸ்ரேலின் இந்தத் தாக்குதலை கத்தார் கடுமையாகக் கண்டித்துள்ளது.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றம் காரணமாகவே ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )