
தேசிய பொலிஸ் பயிற்சி நிறுவகத்தில் ஆய்வு மையம் திறப்பு
2011 ஆம் ஆண்டின்44 ஆவது இலக்க தேசிய பொலிஸ் பயிற்சி நிறுவகச் சட்டத்தின் பிரகாரம், அந் நிறுவகத்தின் நீண்டகால தேவையை நிறைவேற்றும் வகையில் அமைக்கப்பட்ட புதிய ஆய்வு மையம் (Research Center) (2026 ஏப்ரல் 09) திறந்து வைக்கப்பட்டது.
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஜீவ மெதவத்த அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஓய்வு பெற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரோஹான் அபேவர்தன அவர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்ட அறிஞர்கள் குழு, மேலும் இலங்கை பொலிசின் சிரேஷ்டப் பொலிஸ் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இவ் ஆய்வு மையம் திறக்கப்பட்டது, இலங்கை பொலிஸ் சேவையின் 160ஆம் ஆண்டு பொலிஸ் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச ஆய்வு மாநாட்டுடன் இணைந்து நடைபெறுவது சிறப்பம்சமாகும்.
இந் மையத்தின் மூலம் எதிர்பார்க்கப்படும் முக்கிய நன்மைகள்: பொலிஸ் சேவையில் நவீன அறிவியல் ஆய்வு முறைகளை அறிமுகப்படுத்துதல், அதிகாரிகளின் தர்க்க மற்றும் விசாரணை திறன்களை சர்வதேச தரத்துக்கு ஏற்ப மேம்படுத்துதல், பல்கலைக்கழகங்கள் மற்றும் வெளிப்புற அறிஞர்களுடன் இணைந்து குற்றவியல் மற்றும் சமூக பொலிஸ் சேவைகள் தொடர்பான புதிய அறிவை உருவாக்குதல் ஆகியவையாகும்.

