
அரசு வைத்திய அதிகாரிகளின் வேலைநிறுத்தம் நிறைவு – அடுத்தகட்ட நடவடிக்கை புத்தாண்டிற்கு பின்னர்
அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்த 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் இன்று (11) காலை நிறைவடைவதாக அந்தச் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“நாங்கள் அறிவித்தபடியே, இன்று காலை 8 மணியுடன் இந்த வேலைநிறுத்தம் நிறைவடைகிறது. அதன்படி, இன்று காலை 8 மணிக்குப் பிறகு நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைக் கட்டமைப்பில் பணிகள் வழமை போல் முன்னெடுக்கப்படும். இருப்பினும், இதற்கு மேலதிகமாக நாங்கள் எடுக்கவுள்ள தீர்மானங்களை புத்தாண்டுக்குப் பிறகு நாட்டுக்கு அறிவிக்க எதிர்பார்க்கிறோம். தற்போது இந்தப் பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றுள்ளது.”

