பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டம்

பொதுமக்கள் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் புத்தாண்டு காலத்தைக் கொண்டாடுவதை உறுதி செய்யும் வகையில், நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டமொன்றை பாதுகாப்பு அமைச்சு அமுல்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துயகொன்தவின் வழிகாட்டலின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முப்படைகள், இலங்கை பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் இணைந்து இந்தத் திட்டத்தை முன்னெடுக்கின்றனர்.

பண்டிகைக் காலங்களில் நடைபெறும் விழாக்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் மத வழிபாட்டு நிகழ்வுகள் குறித்து தீவிர கண்காணிப்பு முன்னெடுக்கப்படும்.

இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் விசேட செயற்பாட்டு அறை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

இது முப்படை அதிகாரிகளின் பிரதிநிதித்துவத்துடன் ஒரு கூட்டுச் செயற்பாட்டு மையமாக இயங்கும்.

பொதுமக்கள் ஏதேனும் அவசரத் தேவைகளுக்காக பின்வரும் தொலைபேசி எண்கள் மூலம் செயற்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளலாம்,

011-2013051

011-2027148

011-2027149

011-2430912

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )