பாதுகாப்பை ஸ்டிக்கர்களை திருடி 500 ரூபாவிற்கு விற்றமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள பாதுகாப்பு அதிகாரி உட்பட இருவர் கைது

பாதுகாப்பை ஸ்டிக்கர்களை திருடி 500 ரூபாவிற்கு விற்றமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள பாதுகாப்பு அதிகாரி உட்பட இருவர் கைது

பொலிஸ் விசேட பணியகத்தின் விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட சோதனையில், வேரஹெர மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் பணிபுரியும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹோமாகமவைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரும், புலத்கொஹுபிட்டியவைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

10,000 ரூபா செலுத்தி உரிமம் பெற விரும்புவதாக பொலிஸார் ஒருவரை மாறுவேடத்தில் அனுப்பி இந்தச் சோதனையை முன்னெடுத்தனர். இதன்போது பிரதான சந்தேக நபர் சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

திணைக்களத்தில் பணிபுரியும் பாதுகாப்பு குறித்த அதிகாரி, உரிமங்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் உத்தியோகபூர்வ பாதுகாப்பு ஸ்டிக்கர்களை இரகசியமாகத் திருடி, அவற்றை தலா 500 ரூபாவிற்கு பிரதான சந்தேக நபருக்கு விற்று வந்துள்ளார். அவரிடமிருந்து 9 ஸ்டிக்கர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக போரலெஸ்கமுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் நிலவும் முறையான ஊழல்கள் குறித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவும் பொலிஸ் விசேட பணியகமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

குறிப்பாக, வாகன இறக்குமதியாளர்களுக்கு “கராஜ் இலக்கங்கள்” (Garage Numbers – CC Numbers) வழங்குவதற்காக சிரேஷ்ட அதிகாரிகள் இலஞ்சம் கோருவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து இந்த விசாரணைகள் கவனம் செலுத்தியுள்ளன.

முன்னைய ஆணையாளர் ஒருவரினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையைத் தவறாகப் பயன்படுத்தி, அனுமதி வழங்கும் நடைமுறையை வேண்டுமென்றே சிக்கலாக்கி, இறக்குமதியாளர்களிடம் பெரும் தொகையை அதிகாரிகள் வசூலிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )