சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உலர்ந்த மஞ்சள் தொகை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உலர்ந்த மஞ்சள் தொகை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

கற்பிட்டி, பங்களாவத்தை மற்றும் சேதவாடி கடற்கரைப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 907 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஏப்ரல் 06 இரவு,வடமேற்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட இலங்கை கடற்படைக் கப்பல் ‘விஜய’ நிறுவனத்தின் ஆலங்குடா துணைப்பிரிவினர், கற்பிட்டி பங்களாவத்தை கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் போது இரண்டு சந்தேகத்திற்கிடமான மூடைகளைக் கண்டறிந்தனர். அவற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 80 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஏப்ரல் 07 மாலை, கடற்படையினரும் கற்பிட்டி பொலிஸாரும் இணைந்து சேதவாடி கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட மற்றுமொரு சோதனையின் போது, 16 சந்தேகத்திற்கிடமான மூடைகள் சோதனையிடப்பட்டன. அவற்றில் இருந்த சுமார் 827 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட இந்த மஞ்சள் விநியோகம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்புப் பிரிவு மற்றும் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )