
புத்தளத்தில் முச்சக்கர வண்டி – வேன் மோதி விபத்து – தந்தை உயிரிழப்பு – தாய் – இரு பிள்ளைகள் படுகாயம்
வெள்ளவாய – மொனராகலை பிரதான வீதியின் புத்தல உனாவட்டுன பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வேன் ஒன்றுடன் மோதி இன்று (15) அதிகாலை விபத்துக்குள்ளானது.
இந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் முச்சக்கரவண்டியின் ஓட்டுநர் உயிரிழந்ததுடன், அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் படுகாயமடைந்த நிலையில் புத்தளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் அம்பாறை பகுதியைச் சேர்ந்த நிஷாந்த தேவப்பிரிய பண்டார என அடையாளம் காணப்பட்டுள்ளார். இக்குடும்பத்தினர் அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

