இன்று- நாளை – நாளை மறுதினம் அரச அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும் – அரசாங்கத்தின் அறிவிப்பு

இன்று- நாளை – நாளை மறுதினம் அரச அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும் – அரசாங்கத்தின் அறிவிப்பு

இன்று (15), நாளை (16) மற்றும் நாளை மறுதினம் (17) அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும் என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நிமித்தம் அரசு ஊழியர்களுக்கு திங்கட்கிழமை மற்றும் நேற்று (14) ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

இதேவேளை, புத்தாண்டுக்காகத் தத்தமது ஊர்களுக்குச் சென்ற பொதுமக்களின் வசதிக்காக இன்று (15) முதல் மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அனைத்து மாகாண போக்குவரத்து அதிகார சபைகளுக்கும் இதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் ஷெரின் அதுகோரல குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இன்று சாதாரண அலுவலக நாள் என்பதால் அலுவலக ரயில்கள் வழக்கம் போல் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பயணிகளின் தேவையைக் கருத்திற்கொண்டு ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என ரயில்வே போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )