ஈரானிலிருந்து புறப்பட்ட மேலும் இரண்டு கப்பல்களைஹோமுஸ் நீரிணையை ஊடாக செல்லவிடாது தடுத்த அமெரிக்கா

ஈரானிலிருந்து புறப்பட்ட மேலும் இரண்டு கப்பல்களைஹோமுஸ் நீரிணையை ஊடாக செல்லவிடாது தடுத்த அமெரிக்கா

ஹோமுஸ் நீரிணை வழியாக வெளியேற முயன்ற இரண்டு எண்ணெய் கப்பல்களை அமெரிக்க கடற்படையின் போர் கப்பல் ஒன்று திருப்பி அனுப்பியுள்ளது.

இந்தக் கப்பல்கள் ஈரானின் சபாஹார் (Chabahar) துறைமுகத்திலிருந்து புறப்பட்டவை என்றும், வானொலித் தொடர்புமூலம் அவற்றைத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், ஈரானிலிருந்து புறப்பட்ட சுமார் 06 கப்பல்கள் இதுவரை அமெரிக்காவினால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

இந்தச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டொலர் வரம்பைத் தாண்டியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஹோமுஸ் நீரிணை ஊடாக விதித்துள்ள கடற்படை முற்றுகை (Naval blockade) அமல்படுத்தப்பட்டு இன்றுடன் இரண்டு நாட்கள் ஆகின்றன.

ஹோமுஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பலைகளை கட்டுப்படுத்துவதன் மூலம் ஈரானுக்கு அழுத்தம் கொடுப்பதே இதன் நோக்கமாகும்.

இந்த நடவடிக்கையில் 10,000-க்கும் மேற்பட்ட படைவீரர்கள்,
12-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் மற்றும் ஏராளமான விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரானுடன் தொடர்பில்லாத ஏனைய நாடுகளின் கப்பல்கள் ஹோமுஸ் நீரிணை வழியாகச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )