நிலக்கரி ஊழல் குறித்து எவரும் ஆணைக்குழுவிடம் தகவல் வழங்கலாம் – அமைச்சர் விஜித ஹேரத்

நிலக்கரி ஊழல் குறித்து எவரும் ஆணைக்குழுவிடம் தகவல் வழங்கலாம் – அமைச்சர் விஜித ஹேரத்

நிலக்கரி இறக்குமதியின் போது எவ்வித மோசடியும் இடம்பெறவில்லை எனவும், எனினும் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரம் குறைந்த மட்டத்தில் இருந்ததை ஏற்றுக்கொள்வதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஏரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி பதவி விலகியது தொடர்பாக இன்று (17) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் விஜித ஹேரத்தின் இது பற்றி தெரிவிக்கும் போது ,

நிலக்கரி இறக்குமதியில் முறையான ஆய்வகப் பரிசோதனைகள் நடத்தப்பட்ட பின்னரே கொள்வனவு செய்யப்பட்டது. இருப்பினும், அவற்றைப் பயன்படுத்தும் போது மின் உற்பத்தித் திறன் குறைவாக இருந்ததை அவதானிக்க முடிந்தது. இது நிலக்கரி தரம் குறைவாக இருந்ததைக் காட்டுகிறது.

நிலக்கரி இறக்குமதியில் அமைச்சர் அல்லது வேறு எவரினதும் நேரடித் தலையீட்டுடன் ஊழல் அல்லது மோசடி நடந்ததாக இதுவரை எந்தவொரு விசாரணையிலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

: நிலக்கரி கொள்வனவு தொடர்பான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிடம், மோசடிகள் குறித்த தகவல்கள் தெரிந்த எவரும் முறைப்பாடுகளை வழங்க முடியும்.

நிலக்கரி கொள்வனவு நடவடிக்கைகள் தேசிய கொள்முதல் ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் படியே அரச அதிகாரிகளால் சுயாதீனமாக முன்னெடுக்கப்பட்டன.

இது தொடர்பில் கோப் (COPE) குழுவின் தீர்மானத்தின்படி மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு அறிக்கையில், அமைச்சர் மோசடி செய்ததாக எவ்வித குறிப்புகளும் இல்லை. அங்கு நட்டம் ஏற்பட்டதாக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சர் ஊழலில் ஈடுபட்டார் என கணக்காய்வு அறிக்கையில் எங்குமே கூறப்படவில்லை என்பதை மிகவும் பொறுப்புடன் கூறுகிறோம், என விஜித ஹேரத் மேலும் வலியுறுத்தினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )