
இரண்டாம் பாடசாலைத் தவணை இன்று ஆரம்பம்
2026 ஆம் ஆண்டிற்கான அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலப் பாடசாலைகளின் இரண்டாம் பாடசாலைத் தவணை இன்று (20) ஆரம்பமாகின்றது.
அதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணையின் நான்காம் கட்டமும் இன்று ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
முதலாம் பாடசாலைத் தவணையின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 10 ஆம் திகதியுடன் நிறைவடைந்ததுடன், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்காக ஏப்ரல் 19 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று ஆரம்பமாகும் இரண்டாம் தவணை ஜூலை 24 வெள்ளிக்கிழமை வரை தொடரும்.
இதேவேளை, 2026 ஆம் ஆண்டிற்காக சீன மக்கள் குடியரசின் நன்கொடையாகக் கிடைத்த முழுமையான பாடசாலை சீருடைத் துணிகள் விநியோகிக்கப்பட்டு முடிந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசாங்க மற்றும் நிதியுதவி பெறும் பாடசாலை மாணவர்கள், அங்கீகரிக்கப்பட்ட பிரிவெனாக்களில் கற்கும் பிக்குகள், சீலமாதாக்கள் மற்றும் இல்லற மாணவர்கள் என அனைவருக்குமான
மொத்மாக 11.484 மில்லியன் மீற்றர் துணி விநியோகிக்கப் பட்டுள்ளது
சுமார் 4,418,404 மாணவர்களுக்கு இந்த சீருடைத் துணிகள் ஏற்கனவே பகிர்தளிக்கப்பட்டுள்ளன.

