கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருள் பறிமுதல் ; இரு வெளிநாட்டவர்கள் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருள் பறிமுதல் ; இரு வெளிநாட்டவர்கள் கைது

பெருந்தொகையான ‘குஷ்’ போதைப்பொருளை நாட்டிற்குள் கடத்த முற்பட்ட இரண்டு வெளிநாட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் இந்தோனேசியாவைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரும் 30 வயதுடைய யுவதியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு பயணப் பொதிகளுக்குள் ஐந்து பொதிகளாக பொதியிடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ 401 கிராம் எடையுள்ள ‘குஷ்’ போதைப்பொருளே அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 6 கோடியே 40 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரையும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )