
சட்டவிரோத மதுபானம் பறிமுதல் ; ஒருவர் கைது
பிங்கிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கதுருவெவ பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (19) வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சோதனையின் போது விற்பனைக்காக வைத்திருந்த 75 லீற்றர் அளவிலான சட்டவிரோத மதுபானம் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்டவர் பிங்கிரிய பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் பிங்கிரிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

