தேங்காய் கைத்தொழில் மறுமலர்ச்சிக்காக 56 புதிய அதிகாரிகள் நியமனம்

தேங்காய் கைத்தொழில் மறுமலர்ச்சிக்காக 56 புதிய அதிகாரிகள் நியமனம்

தென்னை பயிச்செய்கை சபை மற்றும் தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றிற்கு 56 புதிய அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பெருந்தோட்டத்துறை மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்னவினால் இந்த நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

நீண்டகாலமாக நிலவி வந்த மனிதவளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதன் மூலம், தேங்காய் துறையின் நிர்வாக, தொழில்நுட்ப மற்றும் களமட்ட நடவடிக்கைகளை அதிக வினைத்திறனுடன் முன்னெடுப்பதே இதன் பிரதான நோக்கமாகும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )