
பிரேக் பாஸ்ட் படத்தின் இதயம் துடிக்கிறது பாடல் வெளியானது
டைரக்டர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய காந்தி கிருஷ்ணா, ‘பிரேக் பாஸ்ட்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இதில் ‘பிக்பாஸ்’ ராணவ், ரோஸ்லின், கிருத்திக் மோகன், அமிதா ரங்கநாதன், அர்ச்சனா, சம்பத் ராம் உள்பட பலர் நடித்துள்ளனர்.
பிரேம் கிளாசிக் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் விரைவில் இந்த படம் ரிலீசுக்கு வர இருக்கிறது.
இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ஏப்ரல் 24ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், ‘பிரேக் பாஸ்ட்’ படத்தின் “இதயம் துடிக்கிறது” பாடல் வெளியாகியுள்ளது.
CATEGORIES Cinema

