
தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் !
தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
தெற்கு லெபனானில் உள்ள மூன்று பகுதிகளில் இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Deir el-Zahrani, Reman மற்றும் al-Saamiya ஆகிய பகுதிகளில் உள்ள ஹிஸ்புல்லா ரொக்கெட் ஏவுதளங்களை இலக்காகக் கொண்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல்கள், பிராந்தியத்தில் நீடித்து வரும் பதற்ற நிலையை மேலும் தீவிரப்படுத்தும் வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.
TAGS al-SaamiyaDeir el-ZahraniHezbollahHezbollah rocket launchersisraelIsrael strikes southern LebanonremanSri lankaWorld News

