தாக்குதல்களில் இருந்து காத்துக்கொள்ள உயர் தலைவர் மொஜ்தபா கமேனியின் பாதுகாப்பு நடவடிக்கைகள் உச்சபட்சமாக பலப்படுத்தபட்டுள்ளது

தாக்குதல்களில் இருந்து காத்துக்கொள்ள உயர் தலைவர் மொஜ்தபா கமேனியின் பாதுகாப்பு நடவடிக்கைகள் உச்சபட்சமாக பலப்படுத்தபட்டுள்ளது

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் உளவாளிகளிடம் இருந்து காத்துக்கொள்வதற்காக ஈரானின் உயர் தலைவரான மொஜ்தபா கமேனி தனது பாதுகாப்பு நெறிமுறைகளை பலப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மிக நெருக்கமான ஒருசில பாதுகாப்பு அதிகாரிகளைத் தவிர வேறு எவரும் அவரைச் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரான் முழுவதும் உள்ள பாதுகாப்புப் படைகளுக்குத் தனது செய்திகளை அனுப்பும்போது, எவ்வித மின்னணுத் தொடர்பு சாதனங்களையும் அவர் பயன்படுத்துவதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

கைப்பட எழுதிய கட்டளைகள்: அதற்குப் பதிலாக, அவர் தனது கைப்பட எழுதிய உத்தரவுகளை மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மூலம், இரகசியப் பாதைகள் வழியாக ஒரு மனிதச் சங்கிலித் தொடர் முறையில் அனுப்பி வைப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஈரானியத் தலைமைத்துவத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )