சோமாலியக் கடற்கரையில் 17 பணியாளர்களுடன் எரிபொருள் கப்பல் கடத்தல் – இலங்கையர் ஒருவரும் இருப்பதாக தகவல்

சோமாலியக் கடற்கரையில் 17 பணியாளர்களுடன் எரிபொருள் கப்பல் கடத்தல் – இலங்கையர் ஒருவரும் இருப்பதாக தகவல்

சோமாலியக் கடற்கரைக்கு அப்பால் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட எரிபொருள் தாங்கி கப்பலின் பணியாளர்களில் இலங்கையர் ஒருவரும் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கப்பலில் மொத்தம் 17 பணியாளர்கள் உள்ளதாகவும் அவர்களில் ஒரு இலங்கையர், 10 பாகிஸ்தானியர்கள், 4 இந்தோனேசியர்கள், ஒரு இந்தியர் மற்றும் ஒரு மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 18,500 எரிபொருள் பீப்பாய்களை ஏற்றிச் சென்ற இந்த கப்பல், கடந்த புதன்கிழமை இரவு சோமாலியக் கடற்கரையிலிருந்து 30 கடல் மைல் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்தபோது ஆயுததாரிகளால் கடத்தப்பட்டது.

தற்போது அந்த கப்பலும் அதன் 17 பணியாளர்களும் கடற்கொள்ளையர்களின் கட்டுப்பாட்டின் கீழ் சோமாலியக் கடற்கரைக்கு அருகில் நங்கூரமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை சோமாலிய அதிகாரிகளோ அல்லது அந்தப் பிராந்தியத்தில் கடற்கொள்ளை தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கும் ஐரோப்பிய கடற்படையினரோ இது குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை.

இது தொடர்பாக மேலதிக விபரங்களைப் பெற வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகளைத் தொடர்புகொள்ள எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என அந்தச் செய்தி மேலும் குறிப்பிடுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )