பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்யுமாறு டொனால்ட் ட்ரம்ப் தமது பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தல்

பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்யுமாறு டொனால்ட் ட்ரம்ப் தமது பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் மோதல்களைத் தீர்ப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது பிரதிநிதிகளான ஸ்டீவ் விட்கோஃப் (Steve Witkoff) மற்றும் ஜாரெட் குஷ்னர் (Jared Kushner) ஆகியோருக்கு அறிவுறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமைதிப் பேச்சுவார்த்தைக்காக அவர்கள் நேற்று பாகிஸ்தான் செல்லத் திட்டமிட்டிருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்த முடியாத சூழலில் 18 மணித்தியால விமானப் பயணம் தேவையற்றது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

“பேச்சுவார்த்தைகள் நடத்தப்போவதில்லை என்றால் இந்தப் பயணம் அவசியமற்றது” என அவர் Fox News சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

ஈரானிய வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் நேற்று முன்தினம் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்திருந்தனர்.

இதன்போது, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமது தரப்பு தயாராக இல்லை என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

ஈரானியத் தூதுக்குழுவினர் நேற்று பாகிஸ்தான் பிரதமர் உள்ளிட்ட உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் சந்திப்புகளை நடத்திவிட்டு அந்நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஈரான் , அமெரிக்கப் பிரதிநிதிகளுடன் நேரடியாக பேசுவதற்கு மறுப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, அமெரிக்கப் பிரதிநிதிகளின் பாகிஸ்தானுக்கான பயணம் பயனற்றது என்ற அடிப்படையில் டிரம்ப் பயணத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார் .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )