
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் இன்று (26) பிற்பகல் நேரத்தில் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுடன் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் குருநாகல் மாவட்டங்களின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தவிர்க்க, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

