
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை ஏப்ரல் 02 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி திருமதி நதி அபர்ணா மியுந்துருகொட முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இதன் பின்னர், வழக்கை மேலதிக விசாரணைக்காக ஏப்ரல் 02 ஆம் திகதி எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

